பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையானபொருள்கள் -
- தேங்காய் துருவல் - 2 கப் ( 400 கிராம் )
- கடலைப்பருப்பு - 3 மேஜைக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 3
- இஞ்சி -1 இன்ச்
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/4
- கறிவேப்பிலை - சிறிது
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கடலைப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.
- நன்கு ஆறியவுடன் தேங்காய்துருவல், மிளகாய் வத்தல், இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் சட்னியை கடாயில் ஊற்றி அடுப்பை ஆப் பண்ணி விடவும். கொதிக்க வைக்க கூடாது. சட்னியை கலக்கி விட்டு வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். தேங்காய் கடலைப்பருப்பு சட்னி ரெடி.
எங்க வீட்டில் அடிக்கடி அம்மா செய்வாங்க...இஞ்சி சேர்க்க மாட்டாங்க...எனக்கு ரொம்ப பிடிக்கும்...எப்பவாது எனக்கு மட்டும் இந்த சட்னியினை செய்து கொள்வேன்...ரொம்ப சூப்பர்ப்...
ReplyDeleteசூடான இட்லிக்கு சூப்பர்ப் காம்பினேஷன்...
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
ReplyDelete