கேரட் அல்வா / Carrot Halwa
தேவையான பொருள்கள் -
- கேரட் - 2
- சீனி - 1/2 கப்
- பால் - 1/2 கப்
- நெய் - 1/4 கப்
- கேசரி கலர் - சிறிது
- ஏலக்காய் பவுடர் - சிறிது
- முந்திரிப்பருப்பு - 10
செய்முறை -
- முதலில் கேரட்டை தோலுரித்து துருவியில் வைத்து நன்றாக துருவிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் பாலை ஊற்றி கேரட்டை போட்டு வேக விடவும். பால் நன்றாக வற்றும் வரை கிளறவும்.
- கேரட் வெந்ததும் சீனியும், கேசரி கலரும் சேர்த்து நன்றாக கிளறவும்.
- சர்க்கரை கரைந்து நன்கு சுருள வதங்கியதும் நெய்யை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். இறுதியில் முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கேரட் அல்வா ரெடி.
No comments:
Post a Comment