Friday, September 20, 2013

பலாக்கொட்டை சாம்பார்




பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 100 கிராம்
  2. பலாக் கொட்டை - 10
  3. தக்காளி - 1
  4. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. காயம் - 1/4 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் - 1
  8. புளி - நெல்லிக்காய் அளவு
  9. உப்பு - தேவையான அளவு 
  10. மல்லித்தழை - சிறிது                          
                            


















அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 4
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  5. கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
  1. தக்காளி, மிளகாய் மற்றும் பலாக்கொட்டையை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். புளியை 200 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் பருப்பு, பலாக்கொட்டை, காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, பலாக்கொட்டை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து  கொதிக்க விடவும் .
  4. மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை  சேர்த்து 5 நிமிடம்  கொதிக்க விடவும். 
  5. தேங்காய் வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து  கொதி வந்ததும் மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, சீரகம், வெங்காயம்  ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து  நன்றாக கலக்கி  விடவும். சுவையான பலாக்கொட்டை சாம்பார் ரெடி .

1 comment:

  1. Pala kottai edhula pottalum arumaya irukkum. Enga ooru nyabagam varudhu .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...