பரிமாறும்அளவு - 4 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தாளிக்க -
செய்முறை -
.
தேவையான பொருள்கள் -
- தட்டப்பயறு - 1 கப் (200 கிராம்)
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
- நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 2
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
- முதலில் தட்டப்பயறை நன்றாக கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பயறு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, தட்டப்பயறு சேர்த்து நன்றாக கிளறவும்.
- கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான தட்டப்பயறு சுண்டல் ரெடி.
.
romba healthy aana sundal.super.happy to follow you.
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வருகைக்கு நன்றி .உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி.
Delete