தேவையான பொருள்கள் -
- பொட்டுக்கடலை - 200 கிராம்
- சர்க்கரை - 100 கிராம்
- முந்திரிப் பருப்பு - 10
- நெய் - 3 மேஜைக்கரண்டி
- மிதமான வெந்நீர் - 50 அல்லது 75 ml
- பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
- இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.
- பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
- எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.
- சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி. இது குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான லட்டு.
லட்டு மிக அருமை
ReplyDeleteHow many days we can keep this ladoo
ReplyDeleteஉடனே காலி செய்ய வேண்டுமா? வெந்நீர் விடுவதால்?
ReplyDeleteவெந்நீருக்கு பதில் பால் சேர்த்து கட்டலாமா?
ReplyDeleteவெந்நீருக்கு பதில் பால் சேர்த்தும் செய்யலாம். பால் சேர்த்து செய்தால் ஒரு நாள் வைத்து சாப்பிடலாம். வெந்நீர் சேர்த்து செய்தால் 4 day's varai வைத்திருந்து சாப்பிடலாம்.
ReplyDeleteMam ukaluku samayal yaru kathukuthaga. Ellam ma seyaraga super mam
ReplyDeleteEnga Amma than katrukoduthanga. ennudaiya intha valarcku karanam Amma than.
DeleteHow to cook ragi kali pls teach me
ReplyDeleteSarkaraikku pathila vellam paagu Kaachi sirithu yellakka thuul serthu urunda pudicha healthy ah irukum
ReplyDelete