தேவையான பொருள்கள் -
- பட்டர் காளான் - 150 கிராம்
- தக்காளி - 1
- பெரிய வெங்காயம் - 2
- முந்திரிப்பருப்பு - 10
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 2
- பூண்டு பல் - 10
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- பெருஞ்சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
- தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி
- கஸ்தூரி மேத்தி - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- முதலில் காளானை சுத்தப்படுத்தி நீளவாக்கில் வெட்டி வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் வெட்டி வைக்கவும். தக்காளியை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
- ஆறியவுடன் மிக்ஸ்சியியில் வதக்கி வைத்துள்ள கலவையுடன் முந்திரிப்பருப்பு, ஏலக்காய், கிராம்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், பெருஞ்சீரகத்தூள், மல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 3 மேஜைக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து நறுக்கி வைத்துள்ள பூண்டுபற்களை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பூண்டு பொன்னிறமானதும் காளானை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறி 100 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
- காளான் வெந்ததும் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பிறகு தக்காளி சாஸ் சேர்க்கவும்.
- கிரேவி கெட்டியானதும் கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான காளான் கிரேவி ரெடி.
சிறந்த வழிகாட்டல்
ReplyDeleteதொடருங்கள்
வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete