தேவையான பொருள்கள் -
- உருளைக்கிழங்கு - 3
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1 தேக்கரண்டி
- முட்டை - 2
- பிரட் துண்டுகள் - 2 அல்லது 3
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தாளிக்க -
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
- குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பின் தோலுரித்து மசித்து வைக்கவும்.
- பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு வெள்ளைப் பகுதியை மிக்ஸ்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு கரம் மசாலா சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- ஆறியதும் மசாலாவை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி பிரட் தூளில் பிரட்டி தட்டி வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கட்லெட்களை முட்டை கலவையில் டிப் பண்ணி போடவும். சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
- சுவையான கட்லட் ரெடி. தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment