பரிமாறும் அளவு - 3நபருக்கு
தேவையான பொருள்கள் -
- கத்தரிக்காய் - 100 கிராம்
- உருளைக்கிழங்கு - 100 கிராம்
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 3/4
- கறிவேப்பிலை - சிறிது
- மல்லித் தழை - சிறிது
செய்முறை -
- உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து தோலுரித்துசிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பின்னர் வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவும்.
- நன்கு வெந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 2 நிமிடம் கிளறி மல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
No comments:
Post a Comment