நவராத்திரி பண்டிகை 9 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வரை வர இருக்கிறது.
எங்கள் ஊரான பாளையங்கோட்டையில் நவராத்திரி விழாவை தசரா என்று சொல்வோம். பாளையில் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாக இருக்கும். இங்கு 10 அம்மன் கோவில்கள் இருக்கிறது. 9 நாட்களுக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடும் இருக்கும். பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும். சரஸ்வதி பூஜை அன்று எல்லா அம்மனுக்கும் வெள்ளை நிற ஆடையில் அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். சிறுவர்களை மகிழ்விக்க கடை வீதிகள், ராட்டினங்கள் எல்லாம் இருக்கும்.
சில வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள். 9 நாட்களுக்கு விதவிதமான சுண்டல்கள் செய்து கொலு பார்க்க வருபவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். 10 வது நாள் 10 சப்பரங்கள் பாளை மார்கட் மைதானத்தில் வந்து நிற்கும்.
நவராத்திரி பண்டிகையை நாமும் சிறப்பாக கொண்டாடுவோம். உங்கள் அணைவருக்கும் என்னுடைய நவராத்திரி தசரா வாழ்த்துக்கள்.
நவராத்திரி ஸ்பெஷல் -
nice sundal collections
ReplyDelete