தேவையான பொருள்கள் -
- முட்டை - 4
- தக்காளி - 2
- மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித்தழை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பட்டை - 1 இன்ச் அளவு
- கிராம்பு - 1
- பெரிய வெங்காயம் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் முட்டைகளை வேக வைத்து கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
- பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
- தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- அதனுடன் உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாடை நன்றாக அடங்கி கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
- வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக கட் செய்யவும் அல்லது நடுவே கீறி கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டைகளை சேர்க்கவும்.
- 5 நிமிடம் கழித்து மல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை தொக்கு ரெடி. சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
No comments:
Post a Comment