தேவையான பொருள்கள் -
- பாசிப் பயறு - 100 கிராம்
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் பயறை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் பயறுடன் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்து வேக வைக்கவும்.
- வெந்தவுடன் நீரை வடித்து விட்டு உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் போடவும்.
- பிறகு அவித்து வைத்துள்ள பாசிப்பயறு மற்றும் காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பாசிப்பயறு சுண்டல் ரெடி.
No comments:
Post a Comment