பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- துவரம்பருப்பு - 50 கிராம்
- கடலைப்பருப்பு - 50 கிராம்
- இட்லி அரிசி - 3 மேஜைக்கரண்டி
- சோம்பு - 1 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 25 கிராம்
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, இட்லி அரிசி, சோம்பு எல்லாவற்றையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு பருப்போடு சிறிது உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
- தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவு போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து அரைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
- நன்கு ஆறிய பிறகு சிறுசிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் 10 நிமிடம் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு சுருள வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும். பருப்பு உருண்டையில் உப்பு சேர்த்திருப்பதால் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- மசாலா வாடை அடங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் பருப்பு உருண்டைகளை சேர்த்து ஒரு கொதி வந்தததும் அடுப்பை அணைக்கவும். சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.
அக்கா, நீங்க செய்து தந்தால் அப்படியே சாப்பிடுவேன்.:) !
ReplyDeleteyummy and tasty kulambu
ReplyDeleteSuper ma
ReplyDeleteThank you mohana
ReplyDeleteTamarind uthalama
ReplyDeleteTamarind serthal nalla irukathu. tomato pothumanathu.
ReplyDeleteHow to prepare Panneer butter masala
ReplyDelete