விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு (2014) ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி வருகிறது.
விநாயகர் துதி
பாலும், தெளிதேனும், பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்க கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா.
விநாயகருக்கு பிள்ளையார், கணபதி என்ற பெயரும் உண்டு. பிள்ளையாரை மரத்தடி முதல் மணிமண்டபம் வரை எங்கும் இவரை காணலாம். எப்போதும் எதையும் தொடங்கும் முன் விநாயகரை வழிபட்ட பிறகே தொடங்குவது நம்முடைய வழக்கமாக இருந்து வருகிறது. சதுர்த்தி அன்று ஏழு பிள்ளையார் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் நல்லது என்றும் சொல்வார்கள்.
பிள்ளையாருக்கு பிடித்த உணவு மோதக கொழுக்கட்டையும், சுண்டலும்,கோதுமை அப்பமும் மிகவும் பிடிக்கும். எனவே இந்த நல்ல நாளில் நாம் வீட்டில் மோதக கொழுக்கட்டை,சுண்டல்,கோதுமை அப்பம் செய்து பிள்ளையாருக்கு படைத்து அவரை வழிபட்டு நாமும் உண்டு இந்த நல்ல நாளில் மகிழ்ச்சியாக இருப்போம். வீட்டிற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கும் சென்று அவரை வணங்கி வருவோம்.
இந்த நல்ல நாளில் எல்லோரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாட என்னுடைய வாழ்த்துக்கள்!
இன்றைய ஸ்பெஷல் -
nice post. wish you a happy vinayaka chaturthi.
ReplyDelete