தேவையான பொருட்கள் -
- வெண்ணெய் - 1/2 கப்
- சர்க்கரை - 1 கப்
- முட்டை - 2
- வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
- பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
- ஆல் பர்பஸ் ப்ளோர் - 1 1/2 கப்
- உப்பு - 1/2 தேக்கரண்டி
- தயிர் - 1/2 கப்
- வாழைப்பழம் - 3
- வெண்ணெய்யை ப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சர்க்கு கொண்டு வரவும். அல்லது லேசாக உருக்கி கொள்ளவும். முட்டை, தயிர் அனைத்தையும் ரூம் டெம்பரேச்சர்க்கு கொண்டு வரவும்.
- வாழைப்பழத்தை நன்றாக மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆல் பர்பஸ் ப்ளோர், உப்பு, பேக்கிங் சோடா மூன்றையும் ஒரு பௌல்லில் கலந்து வைத்துக் கொள்ளவும். ஓவனை 350 F -ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.
- உருக்கிய வெண்ணெய் மற்றும் சர்க்கரையை ஒரு அகல பௌல்லில் சேர்த்து பீட்டர் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- பிறகு முட்டை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மறுபடி பீட்டர் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- பிறகு மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- கடைசியாக மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும்.
- பிரட் பேன்னில் வெண்ணெய்யை நன்றாக தடவி வைக்கவும். பிறகு கலவையை பேன்னில் ஊற்றி சமநிலைப்படுத்தவும்.
- ஓவனில் வைத்து 55 - 60 நிமிடம் வரை பேக் செய்யவும். ஒரு குச்சியை நடுவில் குத்தி வெந்து விட்டதா என பார்க்கவும்.
- நன்றாக ஆறியதும் கட் செய்து பரிமாறவும். சுவையான வாழைப்பழ பிரட் ரெடி.
Bread looks yummy.
ReplyDelete