Friday, August 8, 2014

பாகற்காய் வறுவல் / Bitter Gourd Fry

 பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாகற்காய் - 150 கிராம் 
  2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. எண்ணைய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 
செய்முறை -
  1. முதலில் பாகற்காயின் விதையை எடுத்து  வட்டவட்டமாக வெட்டி அதன் மீது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.                                        
  2. பாகற்காயில் உப்பு சேர்த்திருப்பதால் சிறிது தண்ணீர் விடும். எனவே பாகற்காயை பிழிந்து தனியே வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பாகற்காய்களை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் பரப்பி வைக்கவும்.                                                                  
  4. மீதமுள்ள எல்லா பாகற்காய்களையும் இதே முறையில் வறுத்து எடுக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து தாளிக்க கொடுத்துள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணையை ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூளை போட்டு கிளறவும். 
  6. பிறகு வறுத்து வைத்துள்ள பாகற்காயை போட்டு 2 நிமிடம் கிளறி இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.                                                
  7. உப்பு  சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான பாகற்காய் வறுவல் ரெடி.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...