நான் 4.5.2014 அன்று பால்குளத்தில் உள்ள வேம்படி சாஸ்தா கோவிலுக்கு உறவினர்களோடு சென்று வந்தேன். எங்கள் ஊரான பாளையங்கோட்டையிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு என் அண்ணியின் பேத்திக்கு முடி எடுத்து காது குத்தும் விழா நடந்ததது. எங்களுடைய சொந்தங்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அன்று முழுவதும் நல்ல சந்தோஷமாக பொழுதை கழித்தோம்.
கோவிலில் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தது நாங்களும், மற்றும் உறவினர்கள் அனைவரும் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தோம். வெண்பொங்கலும், சர்க்கரை பொங்கலும் கோவிலில் வைத்து செய்ததால் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருந்தது.
பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலையில் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். அன்று முழுவதும் எங்கள் மனதில் சந்தோஷம் மட்டுமே நிறைந்து இருந்தது. நான் இந்த சந்தோஷத்தை உங்கள் எல்லோரிடமும் பகிரிந்து கொண்டதில் எனக்கு இன்று இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்தது.
நன்றி
சாரதா
nice to hear that you are happy.
ReplyDeleteஎங்கள் குலதெய்வமும் வேம்படி சாஸ்தா தான் பால் குளம்
ReplyDeleteIntha sastha varalaru theriyuma ungaluku
ReplyDelete