பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள்
தேவையான பொருள்கள்
- வெள்ளை முள்ளங்கி - 2
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- எண்ணைய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- முள்ளங்கியை தோலுரித்து பொடிதாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி, மஞ்சள்தூள், உப்பு, மற்றும் ஒரு கை தண்ணீரும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முள்ளங்கி வேகும் வரை நன்கு கிளறவும்.
- முள்ளங்கி நன்கு வெந்தவுடன் மிளகாய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
mullangi poriyal is new one to me. surely will try.
ReplyDelete