தேவையான பொருள்கள் -
தாளிக்க -
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகாய்வத்தல் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் பச்சை வேர்க்கடலையை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரை வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு போடவும்.
- கடுகு வெடித்தவுடன் காயத்தூள், கறிவேப்பிலை, அவித்து வைத்துள்ள வேர்கடலையை சேர்த்து கிளறவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
- இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான வேர்க்கடலை சுண்டல் ரெடி.
sundal looks delicious.
ReplyDelete