பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- மாங்காய் - 1
- சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- சீனி ( சர்க்கரை ) - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/4 பங்கு
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் மாங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து மாங்காய் துண்டுகள் மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- நன்கு வெந்தவுடன் மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
- மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கெட்டியாகும் வரை வைத்திருக்கவும்.
- இறுதியில் சீனியை சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை அணைக்கவும். பச்சடியை பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
- அடுப்பில் அதே கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் பச்சடியில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான மாங்காய் பச்சடி ரெடி.
மாங்காய் பச்சடி செய்யனும் நினைச்சேன், நீங்களும் செய்துபோஸ்ட் செய்திருக்கீங்க.சூப்பர் கா.
ReplyDelete