பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பச்சை வேர்க்கடலை - 50 கிராம்
- தேங்காய் துருவல் - 50 கிராம்
- மிளகாய் வத்தல் - 1
- பச்சை மிளகாய் -1
- பூண்டுபல் - 2
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- காயத்தூள் - சிறிது
- கறிவேப்பில்லை - சிறிது
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்து விட்டு வேர்க்கடலையை சிறிது நேரம் ஆற விடவும்.
- ஆறியவுடன் தோலுரித்துக் கொள்ளவும்.
- பிறகு அதனுடன் மிளகாய்வத்தல், பச்சைமிளகாய், தேங்காய்துருவல், பூண்டு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி கலக்கவும்.
- சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி. இட்லி,தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment