தேவையான பொருள்கள் -
- ஓட்ஸ் - 100 கிராம்
- சீனி - 150 கிராம்
- பால் - 300 மில்லி
- முந்திரிப் பருப்பு - 10
- காய்ந்த திராட்சை - 10
- நெய் - 2 மேஜைக்கரண்டி
- ஏலக்காய்தூள் - 1/2 தேக்கரண்டி
- கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் ஓட்ஸைப் போட்டு லேசாக வறுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, திராட்சையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் 300 மில்லி பாலை ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் ஓட்ஸைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
- ஓட்ஸ் வெந்ததும் சீனியை சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக கலக்கி விடவும்.
- இறுதியில் முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலகாய்தூளை சேர்த்து கலக்கி அடுப்பை அணைக்கவும். சுவையான ஓட்ஸ் பாயசம் ரெடி.
Healthy and tasty payasam. Looks delicious.
ReplyDelete