Saturday, April 5, 2014

தக்காளி ஊறுகாய் / Tomato Pickle

தேவையான பொருள்கள் -
  1. நன்கு பழுத்த தக்காளி - 6
  2. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  3. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி 
  5. கல் உப்பு - தேவையான அளவு                    
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 25 கிராம் 
  2. கடுகு - 1 தேக்கரண்டி                              
செய்முறை -
  1. முதலில் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். 
          
  2. அடுப்பில் கடாயை வைத்து பாதி அளவு நல்லெண்ணெய்  ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி, கல் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 20 நிமிடம் கிளறவும்.                                                                                                                        
                                       
  3. எண்ணைய் பிரிந்து வரும் போது மிளகாய்தூள், காயத்தூள், வெந்தயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக வரும் வரை நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.                                    
  4. அடுப்பில் ஒரு கடாயை வைத்து மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு போட்டு தாளித்து ஊறுகாயின் மேல் ஊற்றி நன்றாக கிளறி ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி. தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.                     

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...