ஒரு வருடத்திற்கு முன்னால் செம்பருத்தி செடி ஓன்று வாங்கி வைத்து நல்ல முறையில் தண்ணீர் ஊற்றியும், உரமும் போட்டு வளர்த்து வந்தோம். ஆனால் என்னவோ முதலில் பூக்கவே இல்லை. ஆனால் செடி நன்றாக இருந்தது. பிறகு தண்ணீரும் ஊற்றி பசுவின் சாணமும் போட்டு வந்தேன்.
ஒரு நாள் திடீரென்று இரண்டு மொட்டுக்கள் இருந்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிறகு இரண்டு பூக்களாக மலர்ந்தது.
இப்போது நிறைய பூக்கள் பூத்து குலுங்குகிறது. அதில் ஒரு பகுதியை போட்டோ எடுத்து போட்டிருக்கிறேன். நீங்களும் பாருங்கள்!
செம்பருத்திப்பூவால் நிறைய நன்மைகள் உண்டு. சாமிப்படங்களுக்கு வைத்து பூஜை பண்ணலாம். தேங்காய் எண்ணையில் செம்பருத்திப்பூக்களை போட்டு காய்ச்சி தலைக்கு தேய்க்கலாம். முடி நன்றாக வளரும். தண்ணீரை சுட வைத்து அதில் 5 பூக்கள் வீதம் போட்டு வடிகட்டி குடித்தால் இதயம் நன்கு வலுப்படும். இதே போல் பாலிலும் போட்டு வடிகட்டி குடிக்கலாம். நீங்களும் முயற்ச்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
நன்றி
சாரதா
ஆகா என்ன அருமையாக பூத்திருக்கு.
ReplyDeleteவாங்க ஜலீலா பூக்களைப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ReplyDeleteஅக்கா, பார்க்கவே மனதிற்கு இதமாக இருக்கு.
ReplyDeleteநன்றி ஆசியா.
Deleteflower has bloomed very well. usually bloomed flowers, in plants, gives much happiness to us. i love gardening.
ReplyDeleteThanks Gayathri
Deleteஇந்த செம்பருத்தியும்,அடுக்கு செம்பருத்தியும், மஞ்சள்,ஆரஞ்சு கலர்களிலுமாக ஊரில் எங்க வீட்டில் இருக்கின்றது. நீங்க சொன்ன மாதிரி செம்பருத்தி பயன்மிக்கது நாங்க இதன் இலையையும்,ஊறவைத்த வெந்தயமும் அரைத்து தலைக்கு வைத்து குளிப்போம்.அப்போ முடி கூட அடர்த்தியா இருந்தது.
ReplyDeleteஉங்க செம்பருத்தி மிக அழகாக பூத்திருக்கு. பார்க்கவே ஆசையா இருக்கு. நல்லா பார்த்துக்குங்க. நன்றி.
உங்கள் வீட்டிலும் மஞ்சள்,ஆரஞ்சு கலர்களில் செம்பருத்திப்பூ இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி பிரியசகி. கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteYen veetu sembaruthiyil vellai pulu vandhu ulladhu. Adharku yena seiya vendum?
ReplyDelete