Thursday, April 17, 2014

மெது பக்கோடா / Methu Pakoda



தேவையான பொருள்கள் -
  1. கடலைமாவு - 100கிராம் 
  2. அரிசி மாவு - 50 கிராம் 
  3. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  4. சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி 
  5. பெரிய வெங்காயம் - 1
  6. பச்சை மிளகாய் - 2
  7. இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
  8. பூண்டுப்பல் - 6
  9. கறிவேப்பிலை - சிறிது 
  10. உப்பு - தேவையான அளவு 
  11. சுடுவதற்கு எண்ணைய் - 200 கிராம்          
செய்முறை -
  1. வெங்காயத்தை  மெலிதாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும். கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கி வைக்கவும்.                      
  2. பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணையை போட்டு கையால் நன்றாக பிசைந்து வைக்கவும்.
  3. பிறகு உப்பு, சோடா உப்பு, நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் இவற்றுடன் ஒரு கை தண்ணீர் தெளித்து பிசையவும்.
  4. தண்ணீர் தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவுக்கலவையை கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.                                  
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மாவுக் கலவையை சிறிதாக எடுத்து  உருட்டாமல் கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.                                                               

  6. மீதமுள்ள மாவுக் கலவையையும் இதே போல் சுட்டு எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணைய் நன்கு உறிஞ்சியவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். சுவையான மெது பக்கோடா ரெடி.           

5 comments:

  1. Wow. Crispy and yummy snack. I want to write articles in tamil. What software you r using.

    ReplyDelete
    Replies
    1. Gayathri - நான் blogger உபயோகிப்பதால் அதிலுள்ள சாப்ட்வேரின் உதவியால் தமிழில் டைப் செய்கிறேன். அதுக்கான லிங்க் இங்கே (https://www.youtube.com/watch?v=zjXQ_XAnogA). Google chrome உபயோகபடித்தினால் google input tools install செய்து தமிழில் டைப் செய்யலாம். அவ்வாறு செய்ய இந்த லிங்கில் (http://www.google.com/inputtools/chrome/) போய் பார்க்கவும்.

      Delete
  2. பகோடாவை எத்தனை நாட்கள் வைத்திருக்களாம்?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...