பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- ராகி மாவு - 1 கப் ( 200 கிராம் )
- சீனி ( சர்க்கரை ) - 100 கிராம்
- தேங்காய் துருவல் - 100 கிராம்
- ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - 200 மில்லி
- உப்பு - 1 தேக்கரண்டி
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ராகி மாவைப் போட்டு லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- 200 மில்லி தண்ணீரை லேசாக சூடு பண்ணவும். மாவு நன்றாக ஆறியதும் மாவுடன் உப்பு, எலக்காய்தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.
- பிறகு சுடு தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கிளறவும். 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- பின்னர் மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மிக்ஸ்சியில் போட்டு எடுப்பதால் மாவு கட்டி விழாது.
- பிறகு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- கலக்கி வைத்துள்ள மாவை இட்லி தட்டில் பரப்பி வைக்கவும்.
- சீனியை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி புட்டு வைத்துள்ள இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும். புட்டு 10 நிமிடங்களில் வெந்து விடும்.
- புட்டு வெந்ததும் எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும். பிறகு அதனுடன் பொடித்து வைத்துள்ள சீனியை சேர்த்து நன்றாக கலக்கி சூடாக பரிமாறவும். சுவையான ராகி புட்டு ரெடி.
No comments:
Post a Comment