இது என்னுடைய 100 வது பதிவு. எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லாருக்கும் நன்றி.
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- இட்லி அரிசி - 200 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
செய்முறை -
- அரிசியை கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து அரைத்து வைத்துள்ள மாவை போட்டு 2 நிமிடம் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

- வதக்கிய மாவை இடியாப்ப அச்சில் போட்டு வட்டமாக இடியப்பா தட்டில் பிழியவும்.

- மீதமுள்ள மாவையும் பிழிந்து இடியாப்ப ஸ்டாண்டில் மாட்டவும்.

- இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பிறகு இடியாப்ப ஸ்டாண்டை உள்ளே வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். இடியப்பா ஸ்டாண்ட் இல்லாவிட்டால் இட்லி தட்டில் பிழிந்தும் செய்யலாம்.

- சுவையான இடியாப்பம் ரெடி. இடியாப்பத்தை தேங்காய் பால் அல்லது குருமாவுடன் பரிமாறலாம்.