வீட்டில் அடிக்கடி உருளைக்கிழங்கு ப்ரை தான் செய்வோம். இப்போது சேப்பங்கிழங்கை வைத்து சிறிது வித்தியாசமாக சேப்பங்கிழங்கு ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போம் !
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
![]() |
தேவையான பொருள்கள் -
- சேப்பங்கிழங்கு - 8
- தக்காளி -1
- மல்லித்தழை - சிறிது
- சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா பொடி - 1/2 தேக்கரண்டி
- பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- சோம்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 20 நிமிடங்கள் வைத்து வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
- ஆறிய பிறகு தோலுரித்து வட்ட வட்டமாக வெட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு கிழங்குகளை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியே ஒரு தட்டில் வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை போடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் பொரித்து வைத்திருக்கும் சேப்பங்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி.