பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பட்டர் காளான் - 250 கிராம்
- பூண்டுப்பல் - 10
- மிளகுத்தூள் - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- காளானை நன்கு சுத்தப்படுத்தி நீள வாக்கில் நறுக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு வதக்கவும்.
- பூண்டு வதங்கியதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பிறகு அதனுடன் காளானை சேர்த்து நன்கு கிளறவும். காளான் வேகும் வரை இடை இடையே கிளறி கொண்டே இருக்கவும்.
- காளான் வெந்ததும் மல்லித்தழை தூவி நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான மிளகு காளான் ரெடி.
வணக்கம்,
ReplyDeleteஎளிய செயல்முறை விளக்கம், மசலா அதிகம் இல்லாமல் மிளகு மட்டும் சேர்த்து நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன். நான் இதுவரை செய்தது இல்லை, இப்போ தங்கள் செயல்முறைப் பார்த்து செய்ய நினைக்கிறேன்.
நன்றி.
வருகை கண்டு மகிழ்ச்சி மகேஸ்வரி.
DeleteSoya Meat - உடன் இவ்வாறு செய்வது வழக்கம்..
ReplyDeleteகாளான் - புதிய செய்முறை..
வாழ்க நலம்!..
வருகை கண்டு மகிழ்ச்சி சார்.
Deleteஇதுவரை அறியவில்லை.தற்போது அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅறிந்ததற்கு நன்றி சார்.
Deleteஆஹா ஸூப்பர் அயிட்டம்
ReplyDeleteநன்றி சகோ.
Deleteஇலகுவான முறை நன்றி நன்றி! செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteசெய்து பாருங்கள் சகோ.
ReplyDeleteசூப்பர் ரெசிப்பி அம்மா செய்து பார்க்கிறேன் அப்புறம் வாழைக்காய் செய்தேன் அம்மா நல்லா இருந்தது என்ன வருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப நன்றி அம்மா
ReplyDeleteவாழைக்காய் பொடி கறி செய்து ருசித்து பார்த்து சொன்ன கருத்தை பார்த்து மகிழ்ச்சி அபிநயா.
Deleteஅருமை தோழி! படங்களுடன் செய்முறை மிகவும் இலகுவாக இருக்கிறது தெரிந்து கொள்வதற்கு.. மிக்க நன்றி தோழி!
ReplyDeleteவருகைக்கு நன்றி தோழி.
ReplyDeleteகாளானுக்குப் பதில் காலிஃப்ளவர் அல்லது உ.கிழங்கு ஏதாவது போட்டுச் செய்யலாமா?
ReplyDeleteகாலி பிளவர், உருளைக்கிழங்கு இரண்டிலும் இதே முறையில் செய்யலாம் சார். வருகைக்கு நன்றி.
ReplyDeleteமிளகு காளான் குறிப்பு ஈசியாக இருக்கு. செய்துடலாம் அக்கா. நன்றி.
ReplyDelete