தேவையான பொருள்கள் -
- பிரஷ் பட்டாணி - 1 கப் ( 200 கிராம் )
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- முந்திரிப்பருப்பு - 10
- கசகசா - 1 தேக்கரண்டி
- வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பட்டை - 1 இன்ச் அளவு
- கிராம்பு - 2
- கசகசாவை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அதோடு முந்திரிப்பருப்பையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
- வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பிறகு பட்டாணி சேர்த்து கிளறி அதோடு ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- பட்டாணி நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள கசகசா, முந்திரிப்பருப்பு கலவையை சேர்த்து மசாலா கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- பிறகு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான பீஸ் மசாலா ரெடி. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
நல்ல சமையல் குறிப்பு...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
நன்றி குமார்.
Deleteசிறந்த வழிகாட்டல்
ReplyDeleteதொடருங்கள்
தொடர்கிறேன் சார்.
Deleteகுறிப்புகள் இப்பொழுது வரிசையாக சிறப்பாக இருக்கிறது
ReplyDeleteநலம்தானே பதிவுகள் 3 கடந்து விட்டது சகோ.
நான் நலம் சகோ. உங்கள் தளம் வந்து கருத்து சொல்லி விட்டேன்.
Deleteநன்றிம்மா சமையல் குறிப்புக்கு .
ReplyDeleteவருகைக்கு நன்றிம்மா.
Deleteசுவையான குறிப்பு..
ReplyDeleteபச்சை பட்டாணி உடலுக்கு நல்லது..
கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து செய்வது வழக்கம்..
Deleteதேங்காய் பால் சேர்த்து சென்னாவில் செய்த பதிவு கொடுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடுங்கள்.
படங்களே அசத்தலாக இருக்கும்மா,,,,,,,
ReplyDeleteசெய்துபார்க்கிறேன்
தொடர் வருகைக்கு நன்றி மகேஸ்வரி.
ReplyDeleteஅருமை! பகிர்வுக்கு நன்றி சகோதரி!
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோதரி.
ReplyDeleteசப்பாத்திக்கு சைடிஷ் எத்தனை தந்தாலும் செய்யலாம். நெக்ஸ்ட் டைம் சப்பாத்திக்கு உங்க குறிப்புதான் அக்கா.
ReplyDeleteகண்டிப்பாக செய்து சுவைத்து மகிழுங்கள் பிரியசகி.
Deleteசெய்து பார்த்தேன். சூப்பர் மா தேங்க்யூ
ReplyDeleteசெய்து பார்த்து சொன்ன கருத்துக்கு நன்றி அபிநயா.
ReplyDeleteGood,Thanks
ReplyDeleteYummy....
ReplyDeleteThank you
DeleteHow to prepare this Garam masasala?
ReplyDelete