Wednesday, September 23, 2015

பீட்ரூட் அல்வா / Beetroot Halwa

தேவையான பொருள்கள் -
  1. துருவிய பீட்ரூட் - 1 
  2. காய்ச்சிய பால் - 100 மில்லி 
  3. சீனி - 50 கிராம் 
  4. நெய் - 4 மேஜைக்கரண்டி 
  5. முந்திரிப்பருப்பு - 10
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முத்திரிப்பருப்பை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
  2. அதே  கடாயில்  ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பீட்ரூட்டின் ஈரத்தன்மை போகும் வரை நன்கு கிளறவும்.
  3. ஈரத்தன்மை போனதும் பாலை சேர்த்து பால் வற்றும் வரை கிளறவும்.
  4. பால் நன்கு வற்றியவுடன் சீனி சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
  5. பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, மீதமுள்ள நெய் இரண்டையும் சேர்த்து நன்றக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பீட்ரூட் அல்வா ரெடி.

29 comments:

  1. ஹை நான் தான் பர்ஸ்டு!!!! அல்வா எனக்கு தான்...)

    ReplyDelete
    Replies
    1. எடுத்துக்கொள்ளுங்கள் அபிநயா.

      Delete
  2. இன்னைக்கே செஞ்சு பார்த்திட்டு சொல்றேன்மா.பீட்ரூட் 3,4 இருக்கு. தேங்க்யூ சாரதாம்மா

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்திட்டேன் அம்மா. சூப்பர்ப்... ஹிஹி!! ஜூனி மட்டும் 1 ஸ்பூன் அதிகமாயிடுச்சு...)

      Delete
  3. ஒரு தடவை பாதாம் அல்வா பண்ணி சட்டிய விட்டு வரல! அது தான் பர்ஸ்டு அன் லாஸ்ட் அல்வா பண்ணது::)ஜெயிச்சிட்டு வந்து சொல்றேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த தடவை கண்டிப்பாக ஜெயிபீங்க !

      Delete
  4. அப்படீனாக்கா நான் ரெண்டாவதா ? எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்....

    ReplyDelete
    Replies
    1. அம்மா பண்ணது எனக்கு நான் பண்ற அல்வா உங்களுக்கு...)

      Delete
    2. செய்து விட்டேன் அண்ணா. நல்லா வந்திருக்கு.

      Delete
    3. நல்லா வந்திருக்கா ? நான் திங்கவே இல்லையே...

      Delete
  5. Ean enaku matum double double ah varuthu oru time than sent pannen

    ReplyDelete
    Replies
    1. Theriyayala Abinaya neenga comment kodukkum pothu nan ontrai delete pani viduvane.

      Delete
  6. நானும் கொஞ்சம் கேக்கலாம்..ன்னு பார்த்தால் -
    பீட்ருட் அல்வாவுக்கு இத்தனை போட்டியா?..

    ReplyDelete
  7. அல்வா இருக்கு சார் நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. அய் ஈசியா தான் இருக்கு, செய்து பார்க்கிறேன். சொதப்பாமா வரனும்,,
    நன்றிமா

    ReplyDelete
    Replies
    1. அல்வா சொதப்பாது. ஈஸியாக வந்து விடும் மகேஸ்வரி.

      Delete
  9. சுவையான அல்வா! எனக்கும் பிடித்த ஒன்று! நன்றி!

    ReplyDelete
  10. வருகை கண்டு மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
  11. வணக்கம்

    சுவைத்தது போல ஒரு உணர்வு... தொடர்ந்து அசத்துங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ரூபன்.

      Delete
  12. நானும் விரைவில் செய்து பார்ப்பேனாம். கேட்ட தரவா போகிறீர்கள். அதனால செய்து தானே பார்க்கணும் அதுக்குள்ளே போட்டி வேறயா ஐயடா நன்றிம்மா !

    ReplyDelete
  13. கண்டிப்பாக தருவேன் இனியாம்மா. நீங்கள் செய்வதை எனக்கு பார்சல் அனுப்புங்க.

    ReplyDelete
  14. ஒரு அல்வா பார்ஷல் எனக்கும் கிடைக்குமா ?,அருமையான பகிர்வு.

    ReplyDelete
  15. கண்டிப்பாக உங்களுக்கும் பார்சல் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  16. வணக்கம் சகோதரி.!

    தங்கள் செய்முறையில் பீட்ரூட் அல்வா மிகவும் நன்றாகவிருந்தது. படங்கள், செய்முறை விளக்கத்திற்கு போட்டியாக கண்ணை கவர்ந்தது. நானும் பீட்ரூட்டில் அல்வா செய்துள்ளேன். ஆனால் தங்கள் முறைப்படி பால் சேர்த்ததில்லை. இனி அவ்விதம் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  17. பால் சேர்த்து செய்து பாருங்கள் சகோதரி நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  18. அக்கா வந்துட்டேன். உங்க பீட்ரூட் அல்வா கண்ணை கவருது. கிட்டதட்ட காரட் அல்வா மாதிரி போல இருக்கு. என்ன நானே செய்து சாப்பிடனும்.ஸ்வீட் என்றா கொஞ்சம் தள்ளிதான்.காரம் எனில் சுடும்போதே காலியாகிடும். செய்துபார்க்கிறேன் அக்கா.

    ReplyDelete
  19. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியசகி.

    ReplyDelete
  20. உங்கள் அனைத்து சமையல் செய்முறைகளும் மிக அருமை ....!
    என்னுடைய YouTube channel க்கு ஆதரவு
    தாருங்கள்...!
    மார்பகப் புற்று நோயை விரட்டும், கெட்ட கொழுப்பை குறைக்கும் மற்றும் மலட்டுத்
    தன்மையை நீக்கும் காளான் க்ரேவி
    செய்முறை:
    Here is the recipe link :

    https://youtu.be/YwZpkR-Uubw

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...