Tuesday, September 15, 2015

விநாயகர் சதூர்த்தி


உங்கள் அணைவருக்கும்  என்னுடைய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள் !

விநாயகர் சதூர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வர இருக்கிறது.

                                           விநாயகர் துதி

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்க கரி முகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா !

விநாயகர் இந்துக்களின் முழு முதற் கடவுளாக விளங்குகிறார். யானைத்தலையும், பெரிய வயிறும் , மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பான அம்சங்களாகும்.

விநாயகருக்கு பிள்ளையார், கணபதி என்ற பெயரும் உண்டு. விநாயகர் மிகவும் எளிமையான கடவுள் ஆவார். விநாயகரை மரத்தடி முதல் மணி மண்டபம் வரை எங்கும் காணலாம்.

எப்போதும் எதையும் தொடங்கும் முன் பிள்ளையாரை வழிபட்ட பிறகே தொடங்குவது நம்முடைய வழக்கமாக இருந்து வருகிறது. விநாயகர் சதூர்த்தி அன்று 7 பிள்ளையார் கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது சொல்வார்கள்.

பிள்ளையாருக்கு மோதக கொழுக்கட்டை, சுண்டல், கோதுமை அப்பம் மிகவும் பிடிக்கும். எனவே இந்த நல்ல நாளில் பிள்ளையாருக்கு பிடித்ததை நாம் வீட்டில் செய்து அவருக்கு படைத்து நாம் விநாயகரை வழி படுவோம்.

விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல் -

  1. மோதக கொழுக்கட்டை 
  2. கொண்டைக்கடலை சுண்டல் 
  3. கடலைப்பருப்பு சுண்டல் 
  4. பாசிப்பயறு சுண்டல் 
  5. வேர்க்கடலை சுண்டல் 
  6. கோதுமை அப்பம் 

15 comments:

  1. ஐங்கரன் அனைவருக்கும் மங்கலங்களை அருள்வாராக!..
    விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

      Delete
  2. ஆஹா வணக்கம்மா,,
    இப்பதான் நினைத்துக்கொண்டேன் கொழுக்கட்டை எப்படிச் செய்ய என்று தங்கள் தளத்தில் பார்க்க நினைத்தேன். அதற்குள் தங்கள் பதிவு,,,,,
    அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்,
    நன்றிமா,,,,,

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி மகேஸ்வரி.

      Delete
  3. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் விநாயகன் எல்லா நலன்களையும் தர வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி பிரியசகி.

      Delete
  4. பிள்ளையாரப்பா பெரியப்பா இனிமேலாவது எனக்கு புத்தி மதியை சொல்லப்பா....
    கொழுக்கட்டை ஞாபகம் வந்து விட்டது

    ReplyDelete
  5. வருக சகோ உங்களுக்கு கொழுக்கட்டை பார்சல் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  6. விநாயகர் சதுர்த்தி வரும் பின்னே, பதிவு வரும் முன்னே. நன்றி.

    ReplyDelete
  7. உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி.

    விநாயகரின் படம் அதி அற்புதமாய் உள்ளது. அவரைப் பற்றியும விரிவாக எழுதி அவருக்கு பிடித்தமான உணவு வகைகளையும் பட்டியலிட்டு எழுதி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  10. உங்கள் தளம் மிகவும் பயன் தருகிறது சகோதரி! மிக்கநன்றி !

    ReplyDelete
  11. மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து வந்து கருத்துக்களை சொல்லுங்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...