நான் வலைப்பூ ஆரம்பித்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. என்னுடைய பதிவுகளை பார்த்து கருத்துக்களை தெரிவிப்பதற்கும், இந்த வெப்சைட்டை மேன்மேலும் வளர உதவி செய்ததற்க்கும் அனணவருக்கும் என் நன்றிகள். இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக இந்த ஸ்வீட் !!!!
தேவையான பொருள்கள் -
- மைதா மாவு - 200 கிராம்
- சர்க்கரை - 100 கிராம்
- தேங்காய் பால் - 50 மில்லி
- தோசை மாவு - 2 குழிக்கரண்டி
- ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
- சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
- சுடுவதற்கு எண்ணெய் - 200 மில்லி
- அடுப்பில் கடாயை வைத்து நன்கு சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் மைதாவை போட்டு கிளறவும்.
- மைதா சூடானதும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். அதனுடன் ஏலக்காய் தூள், சோடா உப்பு சேர்க்கவும்.
- சீனியை மிக்ஸ்சியில் பொடிக்கவும்.
- பின்னர் மைதாமாவுடன் பொடித்த சீனியை சேர்த்து நன்றாக கிளறி அதனுடன் தோசை மாவு, தேங்காய் பால் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு ரெடி பண்ணவும்.
- அரை மணி நேரம் ஊற வைக்கவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு சிறிய குழிக்கரண்டி வீதம் மாவு எடுத்து எண்ணெயில் போடவும்.
- ஒரு புறம் வெந்ததும் திருப்பி போடவும்.இரு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து விடவும்.
- மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான மைதா போண்டா ரெடி.
- மாவை ஊற வைத்து செய்தால் போண்டா நல்ல மிருதுவாக இருக்கும்.
- 50 மில்லி தேங்காய் பால் எடுக்க 100 கிராம் தேங்காய் துருவல் தேவை படும்.
- இந்த அளவுக்கு 15 போண்டா வரை வரும்.
Super quick sweet bonda looks very delicious...
ReplyDeletebonda's looks yummy. i like sweet bonda's.
ReplyDeleteBonda thane nu Na padikkave illa . But today i went a glance romba super. Kalakkitinga madam
ReplyDeleteThank you seythu parungal nantraga irukum.
ReplyDelete