பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- காலிபிளவர் - 100 கிராம்
- பட்டர் பீன்ஸ் - 100 கிராம்
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- சீரகத்தூள் - 1 மேஜைக்கரண்டி
- தக்காளி - 1
- மட்டன் மசாலா - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணைய் - 3 மேஜைக்கரண்டி
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 2
- பெரிய வெங்காயம் -1
- கறிவேப்பிலை - சிறிது
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- குக்கரில் பட்டர் பீன்ஸ் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வைத்து வேக வைத்துக் கொள்ளவும். காலிபிளவரை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு சுருள வதங்கியதும் மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மட்டன் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பின்னர் காலிபிளவருடன் ஒரு கை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகும் வரை கிளறவும்.
- காலிபிளவர் வெந்த்ததும் பட்டர்பீன்ஸ் மற்றும் 200 மில்லி தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
- மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
- கிரேவி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான காலிபிளவர் பட்டர்பீன்ஸ் கிரேவி ரெடி.
No comments:
Post a Comment