Wednesday, March 19, 2014

முட்டை குழம்பு - 2 / Egg Gravy


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை -2
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1/2 தேக்க்கரண்டி 
  4. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
  10. மல்லித்தழை - 2 மேஜைக்கரண்டி              
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 2
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது                             
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி 
  2. முந்திரிப்பருப்பு - 5                                   
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைக்கவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முட்டை மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். முட்டை வெந்ததும் அடுப்பை அணைக்கவும். 
  3. முட்டைகளை எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறியதும் முட்டைகளின் ஓட்டை எடுத்து நான்காக கீறிக் கொள்ளவும்.                                          
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி நன்கு சுருள வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள்  எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.                   
  6. பின்னர் 200 மில்லி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.                                                  
  7. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.                        
  8. குழம்பு கெட்டியானதும் அவித்து வைத்துள்ள முட்டை, மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.                                                               
  9. சுவையான முட்டை குழம்பு ரெடி. ப்ளைன் சாதம், பிரியாணி, பூரி, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...