தேவையான பொருள்கள் -
- வெண்டைக்காய் - 150 கிராம்
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- வெண்டைக்காய், தக்காளி இரண்டையும் பொடிதாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.
- தக்காளி சுருண்டு வரும் போது நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வேகும் வரை நன்கு கிளறவும்.
- வெண்டைக்காய் நன்கு வெந்தவுடன் மிளகாய்பொடி, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.
- சுவையான வெண்டைக்காய் பொரியல் ரெடி.
No comments:
Post a Comment