பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- முருங்கைக்கீரை - 3 கப்
- துவரம்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 1
- பூண்டுப்பல் - 2
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- முருங்கைக்கீரையை தண்ணீரில் அலசி வைக்கவும்.
- துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- பூண்டை தோலுரித்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தலை போடவும். வத்தல் நிறம் மாறியதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் முருங்கைக்கீரையுடன் ஒரு கை தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
- தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய் துருவல், அவித்து வைத்துள்ள பருப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
- சுவையான முருங்கைகீரை பொரியல் ரெடி. சாதத்துடன் பரிமாறலாம்.
No comments:
Post a Comment