எங்க ஊர் பாளையங்கோட்டையை பற்றி உங்கள் எல்லோரிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இதை எழுதுகிறேன்.
பாளையங்கோட்டை திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். பாளையங்கோட்டை ஒரு அழகான நகரமாகும். பாளையங்கோட்டை தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படுகிறது.
பாளையங்கோட்டை என்றால் எல்லோருடைய நினைவுக்கு வருவது முதலில் தாமிரபரணி ஆறு தான்!இங்கு தாமிரபரணி ஆறு இருப்பது பாளையங்கோட்டைக்கு பெரிய சிறப்பை தருகிறது. தாமிரபரணி தண்ணீர் ரொம்ப ருசியாக இருக்கும். இங்குள்ள தண்ணீர் பாளையங்கோட்டையை சுற்றியுள்ள பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, மடத்தூர், சின்னக்குமார்பட்டி போன்ற கிராமங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் நல்ல பயனடைகிறார்கள்.
அல்வாவுக்கு பெயர் போன இடம் திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும் தான்! இங்கு அல்வா ரொம்ப ருசியாக இருக்கும். அல்வா நல்ல ருசியாக இருப்பதற்கு காரணம் தாமிரபரணி தண்ணீர் தான்! வெளியூரிலிருந்து இங்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் செல்ல மாட்டார்கள். இங்கு சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவும், இருட்டுக்கடை அல்வாவும் மிகவும் பிரபலமானவை ஆகும்.
பாளையங்கோட்டையில் மிகவும் பெயர் பெற்ற பழமையான சிறைச்சாலை உள்ளது.
வ .வு .சி விளையாட்டு மைதானம், மருத்துவக்கல்லுரி, ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி, புதிய பேருந்துநிலையம், கல்வி நிறுவனங்கள், வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட் பகுதி, சாந்திநகர் இவை எல்லாம் மிகவும் பெயர் பெற்றவை.
வ .வு .சி விளையாட்டு மைதானத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ச்சி அடைகிறார்கள்.
மருத்துவக்கல்லுரியில் ஆண்களும்,பெண்களும் நல்ல முறையில் படித்து பெரிய மருத்துவர்களாக இருக்கிறார்கள். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் நோயுற்ற மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கிறார்கள். இதனால் மக்கள் நல்ல பயனடைந்து வருகிறார்கள்.
புதிய பேருந்து நிலையமும் இங்கு இருக்கிறது. தென்காசி, புளியங்குடி, ராஜபாளையம், மதுரை போன்ற ஊர்களுக்கு இங்கிருந்து எளிதாக சென்று விடலாம்.
கல்விக்கு பெயர் போன பாளையங்கோட்டையில் நிறைய கல்விநிலையங்கள் இருக்கிறது. எல்லா பள்ளிகளும், கல்லூரிகளும் மிகவும் சிறப்பானவை.
பாளை மார்க்கெட்டில் எல்லா காய்கறிகளும் பசுமையாக இருக்கும். வெள்ளை நிற கத்தரிக்காய், சின்ன பாகற்காய் கிடைக்கும். கீரை வகைகள், கிழங்கு வகைகள் அணைத்து காய்கறிகளும் இங்கே கிடைக்கும்.
வண்ணார்பேட்டையில் ஆர்.எம்.கே.வி, சென்னை சில்க்ஸ், ஆரா சில்க்ஸ் போன்ற பிரபலமான ஜவுளிக்கடைகள் இருக்கிறது.
திருநெல்வேலி டவுணில் போத்திஸ் ஜவுளிக்கடையும், போத்திஸ் சூப்பர் மார்கட்டும் உள்ளது.
பாளையங்கோட்டை இந்து மதத்தவர்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்மக்கள் என்று எல்லா மக்களும் வாழும் நகரமாகும்.
இங்குள்ள இந்து மக்களின் திருவிழாக்களில் தசரா மிகவும் முக்கியமானதாகும். தசரா 10 நாட்கள் வரை நடக்கும். பத்து அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடக்கும். பத்து நாட்களுக்கு கோவில்களில் கூட்டம் நிறைய இருக்கும். பத்தாவது நாள் பாளைமார்க்கெட் மைதானத்தில் பத்து அம்மனும் அலங்காரத்துடன் சப்பரத்தில் வீற்றிருப்பார்கள். பார்ப்பதற்கு ஜெக ஜோதியாக இருக்கும். குழந்தைகளை மகிழ்விக்க ராட்டினங்கள், கடைவீதிகள் எல்லாம் இருக்கும்.
பாளையங்கோட்டையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருநேல்வேலி டவுணில் உள்ள நெல்லையப்பர் கோவில் மிகவும் பிரசித்தமானவை. கோவிலில் உள்ளே காந்திமதி அம்பாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கெல்லாம் வேண்டிய வரத்தை அள்ளித் தருகிறாள். கோவில் பிரகாரத்தை சுற்றி வர ஒரு மணி நேரமாவது ஆகும். கோவில் வாசலில் உள்பகுதியிலும், கோவிலுக்கு வெளிப்பகுதியிலும் கடைவீதிகள் நிறைய இருக்கிறது. மேலும் நெல்லையப்பர் கோவிலில் தினமும் மதியம் 1 மணி அளவில் அன்னதானம் உண்டு. இது கோவிலின் கூடுதல் சிறப்பு ஆகும்.
வெளியூரிலிருந்து இங்கு ட்ரான்ஸ்பரில் வருபவர்களுக்கு கூட மிகவும் பிடித்து விடும். எனவே நீங்க எல்லோரும் எங்க ஊரு பாளையங்கோட்டைக்கு ஒரு தடவை விசிட் பண்ணுங்க!
நன்றி
சாரதா.
A Collage of Palayamkottai & Nellai.
ReplyDeleteNice post.
நல்ல பகிர்வு அக்கா.
ReplyDeleteபொன்ராஜ் பாளையங்கோட்டை பதிவை பார்த்தற்கு நன்றி!
ReplyDeleteஆசியா நம்ம ஊரு பதிவை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி!
ReplyDeleteVery nice place. Nice post. My father worked here for some years. I have been to your place two or three times. Nellaiyappar temple, pothys, halwa can't forget anything. This post takes me to my early days. Thanks for sharing.
ReplyDeleteThank you for your comment.
ReplyDeleteNan Pirantha oor Palayankottai thaan ippothu coimbatore romba santhosama irukku thans madam
ReplyDelete