Saturday, March 8, 2014

பூசணிக்காய் பொரியல் / Poosanikai Poriyal / Pumpkin Poriyal

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பொடிதாக நறுக்கிய பூசணிக்காய் - 150 கிராம்      
  2. சாம்பார்பொடி - 1 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள்தூள்  - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு
  5. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி       
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது                              
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.                                      
  3. பூசணிக்காயில் நீர்ச்சத்து இருப்பதால் 10 நிமிடங்களில் வெந்து விடும். வெந்தவுடன் சாம்பார் பொடியை சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
  4. இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  5. சுவையான பூசணிக்காய் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், புளிக்குழம்பு சாதம், ரசம் சாதம், பரிமாறலாம்.                                                                 

1 comment:

  1. Perfectly cooling poosanikai poriyal for this coming summer akka... looks delicious

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...