Thursday, November 28, 2013

கார்த்திகை கொழுக்கட்டை

 
தேவையான பொருள்கள் -
  1. பச்சரிசி மாவு - 200 கிராம் 
  2. அச்சு வெல்லம் - 100 கிராம்
  3. தேங்காய் துருவல் - 100 கிராம் 
  4. எள் - 1 மேஜைக்கரண்டி 
  5. ஏலக்காய் - 1 தேக்கரண்டி 
  6. நெய் - 1 மேஜைக்கரண்டி
     செய்முறை -
  1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எள்ளை போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். வறுத்ததை தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி தேங்காய் துருவலை வறுத்துக் கொள்ளவும்.
  3. அச்சு வெல்லத்தை 100 மில்லி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் தேங்காய் துருவல், எள், ஏலக்காய் தூள், நெய் எல்லாவற்றையும் கலந்து வெல்ல பாகை சிறிது சிறிதாக ஊற்றி உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
  5. உருட்டி வைத்துள்ள மாவில் ஒரு எலும்பிச்சை அளவு மாவை எடுத்து படத்தில் உள்ளது போல ஓவல் சைசில் கொழுக்கட்டை பிடிக்கவும். மீதமுள்ள மாவிலும் இவ்வாறு செய்து வைத்துக் கொள்ளவும்.
  6. பின்னர் இட்லித் தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். சுவையான கொழுக்கட்டை ரெடி.

4 comments:

  1. கொழுக்கட்டை நிறமே அழகாக இருக்கிறதே...

    ReplyDelete
  2. எனக்குப் பிடித்த கொழுக்கட்டை. பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...