- உருளைக்கிழங்கு - 3
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- கடலை மாவு - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பின் தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
- கடலை மாவை 2 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- கூட்டு கெட்டியாகும் போது கரம் மசாலா, கரைத்து வைத்துள்ள கடலைமாவு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான பூரிக்கிழங்கு ரெடி.
Can you post it in English version please.It will be useful to lots of people.
ReplyDelete