தேவையான பொருள்கள் -
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி - 1 இன்ச் அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் இட்லிகளை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், மிளகாய், இஞ்சி மூன்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து 1 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- உப்பு தேவைப்பட்டால் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். சுவையான இட்லி உப்புமா ரெடி.
No comments:
Post a Comment