தேவையான பொருள்கள் -
- அரிசி - 11/2 கப்
- பருப்பு - 3/4 கப்
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித்தழை - சிறிது
செய்முறை -
- முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி 31/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- தக்காளி, வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- ஊறிய அரிசி, பருப்புடன் மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், காயத்தூள், உப்பு, நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்றாக கலக்கி மூடி அடுப்பில் வைக்கவும்.
- நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து மல்லித்தழை சேர்த்து சாதத்தை நன்கு கிளறி விடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் சாதத்தில் சேர்த்து கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான பருப்பு சாதம் ரெடி.
No comments:
Post a Comment