பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- சென்னா மசாலா பொடி - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- கறிமசால் பொடி - 1/2 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
- சோம்பு - 1/2 தேக்கரண்டி
- பட்டை - 1/2 இன்ச் அளவு
- கிராம்பு - 1
- தக்காளி - 1
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் -1
- கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
- முதலில் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஊறிய கொண்டைக்கடலை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். 3 மேஜைக்கரண்டி கொண்டைக்கடலையை எடுத்து அரைக்க கொடுத்துள்ள பொருள்களுடன் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள கலவை, சென்னா மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- பிறகு அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலை மற்றும் 200 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- மசாலா வாசனை அடங்கி கிரேவி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சென்னா கிரேவி ரெடி.
வாவ்! சூப்பர், நல்ல பக்குவம்.
ReplyDeleteஆசியாவின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeletePoori ku romba nalla irukkum indha gravy.
ReplyDeleteநல்ல முறையில் தெளிவான விளக்க படங்களுடன் சமயல் குறிப்புகளை அளித்தமைக்கு நன்றி
ReplyDelete