பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
அரைக்க -
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 3
- சின்ன வெங்காயம் - 4
- கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/4
- கறிவேப்பிலை - சிறிது
- குக்கரில் உருளைக்கிழங்கு, பட்டர்பீன்ஸ் இரண்டையும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும்.
- உருளைக்கிழங்கு ஆறியதும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் அரைத்து வைத்த மசாலா, உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
- பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- சுவையான உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் கூட்டு ரெடி. பூரி, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
No comments:
Post a Comment