பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
அரைக்க -
தேவையான பொருள்கள் -
அரைக்க -
- மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
- மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
- சோம்புத் தூள் - 1/2 தேக்கரண்டி
- சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 1
- ஏலக்காய் - 1
- தேங்காய் துருவல் - 6 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 10
- மல்லித்தழை - சிறிது
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/4
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் மட்டனை நன்றாக கழுவி நீரை வடித்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் மட்டனை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
- பிறகு அரைத்த கலவையுடன் 300 மில்லி தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொதிக்க வைக்கவும்.
- கொதித்ததும் குக்கரை மூடி விடவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- 25 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான மட்டன் குழம்பு ரெடி.
No comments:
Post a Comment