தீபாவளி ஸ்பெஷல் !!!

Friday, January 3, 2014

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா / Potato GreenPeas Kuruma

                                     
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 2
  2. காய்ந்த பட்டாணி - 50 கிராம் 
  3. மஞ்சள் தூள் - 1/2  தேக்கரண்டி 
  4. சாம்பார் பொடி - 1/2 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு                               
     தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை -  சிறிது                                      
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. பொட்டுக் கடலை - 1 மேஜைக்கரண்டி 
  3. முந்திரிப் பருப்பு - 2
  4. பச்சை மிளகாய் -1
  5. இஞ்சி - 1 இன்ச் அளவு 
  6. பூண்டுப் பல் -2
  7. தக்காளி - 1                                             
செய்முறை -
  1. பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் தோலுரித்த உருளைக்கிழங்கு, பட்டாணி இரண்டும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும்.
  3. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
  4. தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பட்டாணியை தனியே எடுத்து வைக்கவும்.                                                               
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் உருளைக்கிழங்கு, பட்டாணி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  8. கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த கலவையை சேர்த்து குருமா கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.                                     
  9. குருமா கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா ரெடி.

2 comments:

  1. செய்து பார்க்கிறேன் அக்கா. பார்க்கவே அருமை.

    ReplyDelete
  2. கண்டிப்பாக செய்து பாருங்கள் ஆசியா !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...