தீபாவளி ஸ்பெஷல் !!!

Wednesday, January 22, 2014

முட்டை உருளைக்கிழங்கு கறி / Egg and Potato Curry

                                     
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 2
  2. உருளைக்கிழங்கு - 1
  3. தக்காளி - 1
  4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
  7. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி  
  8. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு                         
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் துருவல் - 100 கிராம்                 
அரைக்க -
  1. இஞ்சி - 1/2 இன்ச் அளவு 
  2. பூண்டு - 3 பல் 
  3. மல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி              
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 2
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                             
 செய்முறை -
  1. உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.                                 
  2. இஞ்சி, பூண்டு, மல்லித்தழை மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. தேங்காயுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும். அதே தேங்காய் விழுதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து பால் எடுத்து தனியே வைக்கவும்.                                                                                                                       
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, மல்லித்தழை மூன்றும் சேர்த்து அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.
  6. பின்னர் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் கிளறி 200 மில்லி தண்ணீரில் எடுத்த தேங்காய் பாலை ஊற்றவும். 
  7. அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும்.
  8. உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 
  9. பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...