பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- வேக வைத்த சாதம் - ஒரு கப்
- நடுத்தர மாங்காய் - 1
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- வெந்தயத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- மாங்காயை நன்கு கழுவி தோல் சீவி துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும்.
- ஒரு கப் சாதத்திற்கு 3/4 கப் மாங்காய் துருவல் தேவைப்படும். புளிப்பு தன்மையை பார்த்து அவரவர் விருப்பத்திற்கு தக்கபடி கூட்டி அல்லது குறைத்து கொள்ளலாம்.
- வேக வைத்த சாதத்தை சிறிது நேரம் ஆற விடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு போடவும்.
- கடலைப்பருப்பு பொன்னிறமானதும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மஞ்சள்தூள், காயத்தூள், வெந்தயத்தூள், 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். சாதத்தில் உப்பு இருப்பதால் 1/2 தேக்கரண்டி உப்பு போதுமானது.
- பிறகு துருவி வைத்துள்ள மாங்காய் துருவலை எடுத்து பொடி வகைகளோடு சேர்த்து மாங்காய் முக்கால் பாகம் வேகும் வரை நன்கு கிளறவும். நன்கு வெந்து விட்டால் குழைந்து விடும்.
- மாங்காய் துருவல் முக்கால் பாகம் வெந்ததும் எடுத்து ஆற வைத்திருக்கும் சாதத்தில் கலந்து எல்லா இடங்களிலும் படுமாறு ஒரு கரண்டியால் கலந்து விடவும். சுவையான மாங்காய் சாதம் ரெடி.
- மாங்காய் சாதத்துடன் துவையல், அப்பளம் சேர்த்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.
நேற்றுதான் மாங்காய் வாங்கி வந்தேன்..
ReplyDeleteஉடனடியாக செய்து விட வேண்டியது தான்!..
எளிமையான சுவையான சமையல் குறிப்பு ..
வாழ்க நலம்!..
செய்து பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள் சார்.
Deletewow அழகாக இருக்கிறது சுவையுடன்.
ReplyDeleteசுலபமாகவும் உள்ளது.
நன்றி இனியா.
Deleteஆஹா...மாங்காய் சாதம்....நாவூறுகிறது.....ஊரில் இருந்து கொண்டு வந்த மாங்காய்கள் காலியாகி விட்டது...? இனி அடுத்த சீசன் தான்....
ReplyDeleteஇங்கு மாங்காய் சீசன் இன்னும் முடியவில்லை. உங்களுக்கு மாங்காய் வாங்கி பார்சல் அனுப்புகிறேன் சகோ.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
மாங்காய் சாதமா... நாவில் எஞ்சி ஊறுகிறது... நிச்சயம் செய்து பார்க்கிறோம் Book மார்க் செய்தாச்சி... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.
Deleteமாங்காய் சாதம் / Mango Rice உடன் வருகை தந்துள்ளேன்.
ReplyDeleteஅடுத்து வரும் பதிவுகளில் தொடருகிறேன்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
Deleteமாங்காய் சாதம் சாப்பிட்டிருக்கிறேன்,செய்முறை இப்போது தெரிந்து கொண்டேன்,செய்து பார்த்து சொல்கிறேன் அம்மா...
ReplyDeleteநன்றி...
வாழ்க வளமுடன்...
கண்டிப்பாக செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள் சரிதா.
Deleteதேங்காய் சாதம் தெரியும் மாங்காய் சாதம் புதுமையாக இருக்கின்றதே...
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ.
Deleteஎங்கள் வீட்டில் மாங்காய் சாதம் ரெடி. உண்மைதான் அம்மா. தாங்கள் சொன்ன செயல்முறைகளுடன் நான் உடன் செய்த சாதம். நன்றி.ஆங் எல்லோரும் எங்கள் வீட்டில் நன்றாக உள்ளது என்றார்கள்.
ReplyDeleteபதிவை பார்த்து உடனே செய்து நன்றாக இருந்தது என்ற கருத்தையும் பார்த்து மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி மகேஸ்வரி.
ReplyDeleteஒரு புறம் பார்த்தால் தேமாங்காய், புளிமாங்காய்
ReplyDeleteஎன்று கவிதாயினி கவிதை பாடம் நடத்துகிறார்.
மறுபுறம் தாங்களோ மாங்காய் சாதம் மணம் மகிழ
வயிறாற உண்டு மகிழ செயல் முறை பாடம் நடத்துகிறீர்கள்.
சிறப்பான சேவை! வாழ்த்துகள் சகோ!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
(இன்றையை பதிவை அவசியம் காண வாருங்கள் சகோ!)
சிறப்பான கருத்துக்கு நன்றி சகோ. உங்கள் பதிவையும் காண வருகிறேன்.
ReplyDeleteஆஹா மாங்காய் சாதம் பார்க்கவே நாவூறுகின்றது. மாங்காய் கிடைத்தால் செய்திடுவேன். நன்றி அக்கா.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியசகி.
Deleteமாங்காய் சாதம் பிரமாதம், புகைப்படங்கள் பொருத்தம். நன்று.
ReplyDeleteமிக்க நன்றி சார்.
Deleteஇன்றே செய்து பார்க்கிறோம்... நன்றி...
ReplyDeleteசெய்து பாருங்கள் சார்.
Deleteநன்றாக இருக்கிறது சாரதாம்மா...மாங்காய் சாதம் இதுவரை செய்ததில்லை..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷமி.
ReplyDeleteமாங்காய் சாதம் நிச்சயமாக ருசியாகவே இருக்கும். மிகப்பெரிய தொக்கு மாங்காயைச்சீவி உப்பு காரம் போட்டு தொக்கு ஆக்கி, அதில் சாதத்தைப் பிசைந்து நாங்கள் சாப்பிட்டதும் உண்டு. மாங்காய் எந்த ரூபத்தில் இருந்தாலும் வாய்க்கு ருசியோ ருசி மட்டுமே. சிறப்பான செய்முறைகள் + படங்களுடன் பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteவருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி சார். நீங்கள் சொன்ன மாதிரி நல்ல ருசியாக இருந்தது. அதனால் தான் பதிவு கொடுத்தேன்.
ReplyDeleteமாங்காய் சாதம் அருமை! பச்சை மிளகாய் தான் சேர்ப்பது வழக்கம். நீங்கள் வித்தியாசமாக மிளகாய்த்தூள் சேர்த்து செய்திருப்பதும் பார்க்க அழகாய்த்தானிருக்கிறது!
ReplyDeleteஉங்கள் கருத்தும் அழகாக இருக்கு அக்கா.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteஅழகான படங்களுடன், சுவையான மாங்காய் சாதத்தை செய்முறை விளக்கத்துடன் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். படங்களை பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது. கண்டிப்பாக நானும் செய்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி. விதவிதமான சமையல்களை விளக்கி பகிர்வதற்கு வாழ்த்துக்கள் சகோதரி,!
என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
மிளகாய்த்தூள் கண்டிப்பாக சேர்க்கனுமா மேடம் அதற்கு பதிலாக வத்தல் சேர்க்கலாமா சுவை மாறுபடுமா மேடம் வத்தல் சேர்த்தால்
ReplyDelete