பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பெரிய வெங்காயம் - 5
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1.2 தேக்கரண்டி
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சுருள வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும்.
- இறுதியில் மல்லித்தழையை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- சுவையான வெங்காயம் தக்காளி தொக்கு ரெடி. சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
சூப்பர் டிஷ் அக்கா. எளிமையாகவும் இருக்கு. ஆஹா சப்பாத்திக்கு தோதானது என்றால் கண்டிப்பா செய்வேன். நன்றி பகிர்விற்கு.
ReplyDeleteஉடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரியசகி.
Deleteவீட்டிலும் முக்கியமாய் வெயியூர் பிரயாணம் என்றால் சப்பாத்திக்கு இது தான். ஆனா கரம் மசாலா இல்லாமல் செய்வேன்.பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteதொடர் வருகை தந்து கருத்து சொல்லவதற்கு நன்றி சகோ.
Deleteவெங்காயம் தக்காளி தொக்கு ...
ReplyDeleteஆஹா ... அருமை. எளிமை. இனிமை. ருசியோ ருசி. பகிர்வுக்கு நன்றிகள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
Deleteஇலகுவான முறையில் தக்காளி தொக்கு. மிக்க நன்றி !
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியா.
Deleteவெங்காயம் தக்காளி தொக்கு
ReplyDeleteநல்லதொரு பதிவு! அருமை சகோ!
சட்னி/சாம்பார்க்கு மாற்றாக செய்தால் நலமாக இருக்கும்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உங்கள் வருகையும் கருத்தையும் கண்டு மிக்க மகிழ்ச்சி சகோ.
Deleteஎளிய முறையில் அருமையான பதார்த்தம். ருசித்தேன். நன்றி.
ReplyDeleteருசித்து பார்த்தற்கு மிக்க நன்றி சார்.
Deleteஆகா...! எளிய செய்முறை... நன்றி...
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteஆஹா புகைப்படமே ஆசையை தூண்டுகிறது.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ.
DeleteSimple and Easy - Thanks mam
ReplyDeleteThank you Arjun Karthik.
DeletePlease Add Blog Archieve Widget - It will helps us to view the all posts quickly.
ReplyDeleteThank you so much.
Deleteவெங்காயம்-2,தக்காளி-4 இப்படி சேர்த்து செய்வேன் வெங்காயம்-5,தக்காளி-1 சேர்த்து செய்து பார்க்கிறேன் அம்மா...
ReplyDeleteவாழ்க வளமுடன்...
இந்த தொக்கு வெங்காயத்துக்கு முதலிடம் கொடுப்பதால் வெங்காயம் அதிகமாகவும், தக்காளி குறைவாகவும் சேர்த்து செய்திருக்கிறேன். கண்டிப்பாக செய்து பாருங்கள்.
ReplyDeleteசப்பாத்தி, பரோட்டாவிற்கு நல்லதொரு ருசியான பக்க உணவு!
ReplyDeleteதொடர் வருகை தந்து என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி மனோ அக்கா.
ReplyDeleteவெங்காயம் கொஞ்சம் ஜாஸ்தி தக்காளி கம்மி - நல்ல பொருத்தம்! கொஞ்சம் ஜிவ் என்று வெங்காய காரம் இருக்கும் :) இப்பொழுதே கொஞ்சம் எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது
ReplyDeleteநன்றி!
என் கவிதை வலை பூ : http://roughnote.pixmonk.in/
சினிமா வலை பூ: http://www.pixmonk.in/
கரம் மசாலா இல்லாமல் செய்து இருக்கிறேன் இந்தமுறையில் செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteமிக எளிமையான மற்றும் சுவையான தக்காளி தொக்கு அருமை..
ReplyDeleteGood job aunty
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete