Thursday, May 14, 2015

வெங்காயம் தக்காளி தொக்கு / Onion Tomoto Thokku


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 5
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1.2  தேக்கரண்டி 
  5. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி 
  6. மல்லித்தழை - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு                             
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி                                                                               
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். 
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.                                            
  3. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.   
  4. தக்காளி சுருள வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும்.
                                                                                  
  5. இறுதியில் மல்லித்தழையை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.    
  6. சுவையான வெங்காயம் தக்காளி தொக்கு ரெடி. சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.                                                           

29 comments:

  1. சூப்பர் டிஷ் அக்கா. எளிமையாகவும் இருக்கு. ஆஹா சப்பாத்திக்கு தோதானது என்றால் கண்டிப்பா செய்வேன். நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரியசகி.

      Delete
  2. வீட்டிலும் முக்கியமாய் வெயியூர் பிரயாணம் என்றால் சப்பாத்திக்கு இது தான். ஆனா கரம் மசாலா இல்லாமல் செய்வேன்.பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகை தந்து கருத்து சொல்லவதற்கு நன்றி சகோ.

      Delete
  3. வெங்காயம் தக்காளி தொக்கு ...

    ஆஹா ... அருமை. எளிமை. இனிமை. ருசியோ ருசி. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  4. இலகுவான முறையில் தக்காளி தொக்கு. மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியா.

      Delete
  5. வெங்காயம் தக்காளி தொக்கு
    நல்லதொரு பதிவு! அருமை சகோ!
    சட்னி/சாம்பார்க்கு மாற்றாக செய்தால் நலமாக இருக்கும்!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகையும் கருத்தையும் கண்டு மிக்க மகிழ்ச்சி சகோ.

      Delete
  6. எளிய முறையில் அருமையான பதார்த்தம். ருசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ருசித்து பார்த்தற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  7. ஆகா...! எளிய செய்முறை... நன்றி...

    ReplyDelete
  8. உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஆஹா புகைப்படமே ஆசையை தூண்டுகிறது.

    ReplyDelete
  10. Simple and Easy - Thanks mam

    ReplyDelete
  11. Please Add Blog Archieve Widget - It will helps us to view the all posts quickly.

    ReplyDelete
  12. வெங்காயம்-2,தக்காளி-4 இப்படி சேர்த்து செய்வேன் வெங்காயம்-5,தக்காளி-1 சேர்த்து செய்து பார்க்கிறேன் அம்மா...

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  13. இந்த தொக்கு வெங்காயத்துக்கு முதலிடம் கொடுப்பதால் வெங்காயம் அதிகமாகவும், தக்காளி குறைவாகவும் சேர்த்து செய்திருக்கிறேன். கண்டிப்பாக செய்து பாருங்கள்.

    ReplyDelete
  14. சப்பாத்தி, பரோட்டாவிற்கு நல்லதொரு ருசியான பக்க உணவு!

    ReplyDelete
  15. தொடர் வருகை தந்து என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி மனோ அக்கா.

    ReplyDelete
  16. வெங்காயம் கொஞ்சம் ஜாஸ்தி தக்காளி கம்மி - நல்ல பொருத்தம்! கொஞ்சம் ஜிவ் என்று வெங்காய காரம் இருக்கும் :) இப்பொழுதே கொஞ்சம் எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது

    நன்றி!

    என் கவிதை வலை பூ : http://roughnote.pixmonk.in/
    சினிமா வலை பூ: http://www.pixmonk.in/

    ReplyDelete
  17. கரம் மசாலா இல்லாமல் செய்து இருக்கிறேன் இந்தமுறையில் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  18. மிக எளிமையான மற்றும் சுவையான தக்காளி தொக்கு அருமை..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...